நான்காவது மாடியில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை கால் தவறி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் பெசன்ட் ரோட்டில் வசித்து வருபவர் ராஜு. இவரின் 4 வயது குழந்தை கோபிகாவை நேற்று மாலையில் பச்சையப்பன் தெருவில் இருக்கும் சகோதரி வீட்டிற்கு அழைத்துச் சென்றிருக்கிறார். குழந்தை நான்காவது மாடியில் விளையாடிக் கொண்டிருந்த பொழுது கம்பியின் மீது ஏறியுள்ளது.
ஆனால் கால் தவறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்து இருக்கின்றது. இதையடுத்து உறவினர்கள் சிறுமி கோபிகாவை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். ஆனால் கோபிகா செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டார். இதுபற்றி தகவல் அறிந்து போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.