இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் என்பது நீண்ட காலமாகவே பெரும் பிரச்சினையாக இருக்கிறது. அதுவும் கொரோனாவிற்கு பிறகு வேலை வாய்ப்புகளை இழந்து பலரும் பொருளாதார ரீதியாக சிக்கித் தவித்து வருகின்றனர். இருப்பினும் ஒரு சில நகரங்கள் வேலை உருவாக்கத்தில் சிறப்பான வளர்ச்சியை கண்டுள்ளது. அது குறித்த ஆய்வறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது. அந்தவகையில் மான்ஸ்டர் வேலைவாய்ப்பு குறியீடு அறிக்கையில், இந்தியாவின் இரண்டாம் அடுக்கு நகரங்களில் வேலைவாய்ப்பு உருவாக்கம் தொடர்பான புள்ளி விவரங்கள் வெளியிடப்படும்.
அதன்படி மெட்ரோ நகரங்களிலேயே அதிகமான வேலைவாய்ப்புகளை வழங்கி கோயம்புத்தூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. இதனுடைய வளர்ச்சி 27 சதவீதமாக பதிவாகி உள்ளது. இரண்டாம் இடத்தில் மும்பை உள்ளது. இதனுடைய வளர்ச்சி 26% ஆகும். சென்னை 15 சதவீதத்துடன் நான்காம் இடத்தில் உள்ளது. மூன்றாமிடத்தில் டெல்லி உள்ளது.