தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடைபெற்றது. அதன் பிறகு கொரோனா பரவல் கணிசமாக குறைந்த பிறகு சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் வழக்கம்போல் வகுப்புகளுக்கு சென்றனர். மேலும் திட்டமிட்டபடி 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 13 முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்ற ஜூன் 13 ஆம் தேதி முதல் வகுப்புகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டு முதல் 5 நாட்களில் இருந்து பாடத் திட்டங்களில் இருந்து வகுப்புகள் எடுக்காமல் நல்லொழுக்கம் வகுப்புகளை ஆசிரியர்கள் எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கத்தின் 21 வது பொதுக்குழு மாநில மாநாடு நேற்று நடைபெற்றது. அதில் பள்ளிக்கல்வித்துறை அன்பில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். அதன் பிறகு பேசிய அவர், ஜூன் 13-ம் தேதி முதல் மாநிலத்தில் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட இருக்கின்றன. பள்ளிகள் திறந்த 5 நாட்களுக்கு மாணவர் நல்ல ஒழுக்கத்தை போதிக்கும் வகுப்புகள் நடத்தப்படும். அதன் பிறகு மாணவர்களுக்கு பாட திட்டங்களில் இருந்து வகுப்புகள் எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். மேலும் இந்த ஆண்டு 10,12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூலை அல்லது செப்டம்பர் மாதம் துணை தேர்வு நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.