மாஸ்க் அணியாத பயணிகளை விமானத்தில் செல்ல அனுமதிக்கக் கூடாது என்றும் விமான போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. கட்டுப்பாடுகளை மீறும் பயணிகளை விமானத்தில் செல்ல அனுமதிக்கப்படாதவர்கள் பட்டியலில் சேர்க்கலாம் என்றும், விதிவிலக்கு இருக்கும் சூழலில் மட்டுமே முககவசத்தை அகற்ற அனுமதிக்க வேண்டும் என்றும் விமான போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
மேலும் கொரோனா தடுப்பு விதிமீறல் ஈடுபடுவோரை கட்டுப்பாடற்ற பயணிகளாக கருதலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. முன்னதாக விமானத்தில் செல்லும் பயணிகள் மாஸ்க் அணிவது கட்டாயம் என டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.