இந்தியாவில் பெரும்பாலானோர் பயணம் செய்வதற்கு ரயிலை தான் தேர்வு செய்கின்றனர். ஏனென்றால் சௌகரியமாகவும் குறைந்த கட்டணத்திலும் இதில் பயணிக்க முடியும். இதையடுத்து ரயில் டிக்கெட்டுகளை IRCTC ஆப் மூலமாக முன்பதிவு செய்து கொள்வதற்கு தற்போது பல வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதில் இதற்கு முன்னதாக 6 டிக்கெட் மட்டுமே முன்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், ஒரு மாதத்திற்கு 12 டிக்கெட் வரை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு முதலில் IRCTC கணக்கை தொடங்க வேண்டும். அதில் உங்களுடைய ஆதார் எண் இணைக்கப்பட்டு இருந்தால் இரண்டு மடங்கு கூடுதலாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துகொள்ள முடியும். அதாவது ஒரு மாதத்திற்கு 24 நாட்கள் வரை நீங்கள் முன்பதிவு செய்யலாம். அதனால் ஏராளமானோர் IRCTC கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்து வருகிறார்கள். அவ்வாறு இணைப்பது மிகவும் சுலபமான ஒன்றுதான்.
1. இதற்கு முதலில் IRCTCயின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று உங்களின் கணக்கிற்குள் நுழைய வேண்டும்.
2. அதன் பின்னர் முகப்பு பக்கத்தில் உள்ள “My Account” என்பதை கிளிக் செய்து அதில் ‘link your aadhaar’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
3. இதையடுத்து உங்கள் ஆதார் எண்ணில் உள்ள பெயரை சரியாக டைப் செய்ய வேண்டும். இதனை தொடர்ந்து இதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும்
4. இப்போது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு “OTP” எண் அனுப்பப்படும். அதன் பின் OTP எண்ணை IRCTCயில் பதிவு செய்து அதை உறுதிப்படுத்துக என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
5. இறுதியாக உங்களின் KYC விவரங்களை சரிபார்த்த பின் IRCTC கணக்குடன் ஆதார் இணைப்பு மேற்கொள்ளப்படும். அதன்பின்னர் “your aadhaar has been successfully verified’ என்ற செய்தி திரையில் காண்பிக்கப்படும்.