அமெரிக்கா நாட்டில் உள்ள விக்டோரியா மாகாணத்தில் உள்ள வனப்பகுதியில் ரைஸ்பிள் என்ற இன ஆண் பறவை ஒன்று, பெண் பறவையை கவர்வதற்காக சிறகை விரித்து நடனம் ஆடியது. ஆனால் அது ஆடிய நடனம் பயனற்றுப் போனது.
அந்த வகையில், இந்த ஆண் பறவையானது தன் இணையை சேர்வதற்காக, தலையை ஆட்டியும், தன் அழகிய சிறகுகளை குவித்தும் சிறப்பாக நடனமாடியது. ஆனால் ஏனோ தெரியவில்லை, அந்த ஆண் பறவையின் நடனம், பெண் பறவையை கவரவில்லை.
இதையடுத்து அந்த பெண் பறவையானது, நடனத்தை மட்டும் கண்டு ரசித்துவிட்டு பறந்து போனது. இதனால் அந்த ஆண் பறவை, பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளது. மேலும் இந்த காட்சிகளானது, இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.