Categories
உலக செய்திகள்

கொரோனா வைரஸ் எதிரொலி : சீன எல்லையை மூடிய ரஷ்யா..!

கொரோனா வைரஸ் எதிரொலியாக தங்கள் நாட்டு சீன எல்லையை ரஷ்யா தற்காலிகமாக மூடியுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் ஹுபெய் மாகாணம் உகான் நகரில் கொரோனா வைரஸ் தொற்று  தொடங்கியது. தற்போது இந்த வைரஸ் தாக்குதல் இந்தியா உட்பட 16 நாடுகளுக்கு பரவி பீதியடைய வைத்துள்ளது. நாளுக்கு நாள் இந்த வைரஸ் பாதிப்பினால் உயிரிழப்பவர்கள் , புதிதாக பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

Image result for Russia closes China land border to prevent spread of coronavirus"

சீனாவில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு  பலியானவர்களின் 175_ஆக இருந்த நிலையில் தற்போதைய எண்ணிக்கை 213 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதல் 9,692 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள ஆய்வாளர்கள் பல்வேறு ஆய்வகங்களில், இந்த வைரசுக்கு தடுப்பு மருந்தினை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். உலக நாடுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.

Image result for Russia closes China land border to prevent spread of coronavirus"

இந்த நிலையில் சீன எல்லைப் பகுதியை ரஷ்ய அரசு மூடியுள்ளது. அதுமட்டுமில்லாமல் சீனாவைச் சேர்ந்த மக்களுக்கு மின்னணு விசா வழங்குவதையும் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது. மேலும் தங்களது நாட்டைச் சேர்ந்தவர்கள் சீனாவுக்கு பயணம் செல்வதை தவிர்க்குமாறு அறுவுறுத்தியுள்ளது.

 

Categories

Tech |