குடோனில் பதுக்கிய ஒரு டன் பிளாஸ்டிக் பொருள்களை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை மாநகராட்சி மண்டல அதிகாரி வேல்முருகன் தலைமையில் சுகாதார அதிகாரி வாசுதேவன், துணை அதிகாரிகள் ஆகியோர் அடங்கிய குழு நேற்று சென்னை சென்ட்ரல் அருகே உள்ள வால்டாக்ஸ் சாலை, மன்னர் தெரு பகுதியில் சோதனை செய்தனர். அப்போது சந்திரமோகன் என்பவருக்கு சொந்தமான குடோனில் ஒரு டன் எடை கொண்ட தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், தட்டுகள், டீ கப்புகள், ஸ்டிராக்கள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து குடோன் உரிமையாளர் சந்திரமோகனுக்கு ரூபாய் 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பொதுமக்களுக்கு இதுபோன்று பிளாஸ்டிக் பொருள்கள் உபயோகிக்கும் கடைகள் குடோன்கள் இருப்பது தெரிய வந்தால் உடனடியாக மாநகராட்சிக்கு தகவல் கொடுத்து பிளாஸ்டிக் ஒழிப்பில் பங்குபெற வேண்டும் எனவும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.