Categories
மாநில செய்திகள்

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு…. இலவச ஆன்லைன் வகுப்பு….. அசத்தல் திட்டம் அறிவிப்பு….!!!!

புதுமையான சிந்தனைகளை ஊக்குவிக்கும் வகையில் கணினி மூலம் அவுட் ஆஃப் தி பாக்ஸ் திங்க்  என்ற புதிய திட்டத்தை சென்னை ஐஐடி அறிமுகம் செய்துள்ளது .

கல்லூரி மாணவர்களின் சிந்தனைத் திறனையும், புதிய முயற்சிகளையும் ஊக்குவிக்கும் வகையில் “அவுட் ஆஃப் தி பாக்ஸ் திங்கிங்” என்ற பாடத்திட்டத்தை சென்னை ஐஐடி பேராசிரியர்கள் உருவாக்கியுள்ளன . ப்ரவர்தாக் என்னும் அமைப்பு மூலம் ஆன்லைனில் கட்டணமின்றி கணித பாட திட்டத்தை இளம் தலைமுறையினருக்கு கற்றுத் தரும் நோக்கில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தொடக்க கல்வி முடித்த மாணவர்கள், ஆறாம் வகுப்பிலிருந்து வயது வரம்பின்றி இந்தத் திட்டத்தில் பங்கேற்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை ஐஐடி வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இயக்குனர் காமகோடி கூறியதாவது: ” இந்த திட்டம் கட்டணம் எதுவுமின்றி தொடங்கப்பட்டுள்ளது. இதனால் கிராமப்புற அரசு பள்ளி மாணவர்கள் பயன் பெறுவதற்கு வாய்ப்பாக இருக்கும். இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள அனைவருக்கும் ஆன்லைனில் இலவசமாக பாடத்திட்டம் இணையவழியில் கிடைக்கும்.

Pravartak.org/out of the box thinking எனும் இணையதளத்தில் நான்கு நிலைகளில் இந்த பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி தொடக்க கல்வி முடித்த பள்ளி மாணவர்கள் ஆறாம் வகுப்பில் இருந்து இணையதளம் மூலம் இந்த பாடத் திட்டத்தில் இணையலாம். 6,8,9,11 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு நான்கு நிலைகளில் இந்த கணித பாடத்திட்ட கல்வி, கணினி மூலம் கற்று தரப்படுகிறது.

மொத்தமாக நான்கு நிலை பாடத்திட்டமும் சேர்த்து 100 மணிநேரம் இடம்பெறும். மாணவர்கள் அறிவுத் திறனை சோதிக்கும் வகையில் ஆன்-லைன் முறையில் மொத்த படிப்பு முடிந்தவுடன் நேரடி தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாவது பேட்ச் ஜூலை 3ம் தேதி தொடங்க உள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவு ஜூன் 22ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |