புதுச்சேரி அரசு அலுவலகங்களில் 17 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நிதி துறை வெளியிட்டுள்ள உத்தரவில், கடந்த மே மாதம் 17ஆம் தேதி தலைமைச் செயலர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அரசுத்துறைகளில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது என முடிவு எடுக்கப்பட்டது. ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த புதுச்சேரி யூனியன் பிரதேசம் முழுவதும் அரசு துறைகளில் தடை விதிக்கப்பட்டது.
அதன்படி பிளாஸ்டிக் பை, பிளாஸ்டிக் கொடி, பிளாஸ்டிக் தண்ணீர் பாக்கெட், சமையல் மேஜையில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் விரிப்பு, தர்மாகோல் கப், பலூன், பிளாஸ்டிக் கரண்டியுடன் கூடிய ஐஸ்கிரீம், தர்மாகோல், நூறு மைக்ரானுக்கு குறைவான பிளக்ஸ் விளம்பரங்கள், பிளாஸ்டிக் ஸ்பூன் உட்பட 17 பொருட்களுக்கு அரசுத்துறைகளில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது