உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் தேதி இரண்டு குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தது. அதாவது அன்று மாலை 6 மணிக்கு வாரணாசியில் உள்ள சங்கத் மொச்சான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அன்று பலத்த சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதனால் பக்தர்கள் அலறியடித்து ஓடினர். பலர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர். அதனைத் தொடர்ந்து அங்கு குண்டு வெடித்த 15 நிமிடங்கள் கழித்து வாரணாசி கன்டோன்மெண்ட் ரயில் நிலையத்தில் முதல் வகுப்புப் பயணிகள் ஓய்வு அறைக்கு வெளியே ஒரு குண்டுவெடிப்பு வெடித்தது. இதனால் ரயிலுக்காக காத்துக் கொண்டிருந்த பயணிகள் அங்கும் இங்கும் அலறியடித்து ஓடினார்கள். ஒரே நாளில் நடைபெற்ற இந்த இரண்டு சம்பவங்களில் 28 பேர் பலியானார்கள். மேலும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.
அதுமட்டுமில்லாமல் கோடாலியை பகுதியில் உள்ள ரயில்வே கிராசிங்கில் தண்டவாள பகுதியில் ஒரு குக்கர் குண்டு கண்டுபிடிக்கப்பட்டது. நல்லவேளையாக அந்த குண்டு வெடிக்கவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்துவதற்காக சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு தீவிர விசாரணை நடத்தி வந்த போது, வலியுல்ல கான் என்ற பயங்கரவாதிக்கு சம்பந்தம் இருப்பதை கண்டுபிடித்தனர். இவர் உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர் என்று தெரியவந்தது. அவரை சிறப்பு புலனாய்வு குழு கைது செய்தனர். அவர் வங்காளதேசத்தை சேர்ந்த ஹர்கத் உல் ஜிகாத் அல் இஸ்லாமி என்ற பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. இதனையடுத்து வலியுல்லா கான் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் கொலை, கொலை முயற்சி மற்றும் வெடிபொருள்கள் சட்டத்தின் கீழ் பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு அவர் மீது மொத்தம் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் 16 ஆண்டுகள் நடந்து வந்த வழக்கு விசாரணை சமீபத்தில் முடிவடைந்தது. கடந்த 4ஆம் தேதி காசியாபாத் மாவட்ட செசன்ஸ் கோர்ட் நீதிபதி ஜிதேந்திர குமார் சின்கா தீர்ப்பளித்துள்ளார். அதாவது, இரண்டு வழக்குகளில் பயங்கரவாதிகள் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. 2 வழக்குகளில் அவர் குற்றவாளி என்று அறிவித்தார். அதனைத் தொடர்ந்து 3-வது வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் வலியுல்லா கான் விடுதலை செய்தார். மேலும் தண்டனை விவரங்கள் 6 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிபதி கூறினார். அதன்படி தண்டனை அறிவிப்புக்காக காசியாபாத் மாவட்டம் சென்சஸ் கோட் நேற்று பிற்பகல் 2 மணிக்கு கூடியது. அப்போது, வலியுல்லா கான்னுக்கு ஒரு வழக்கில் தூக்கு தண்டனை, மற்றொரு வழக்கில் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி ஜிதேந்திர குமார் சின்கா உத்தரவிட்டார். மேலும் குண்டுவெடிப்புகள் நடந்து 16 ஆண்டுகளுக்கு பிறகு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.