Categories
மாநில செய்திகள்

“இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள்”….. சிதம்பரம் நடராஜர் கோயிலில் திடீர் ஆய்வு….!!!!

சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்றும் நாளையும் இந்து சமய அறநிலையத்துறையினர் ஆய்வு செய்ய உள்ளனர். இந்த கோவிலின் வரவு, செலவு கணக்குகளை இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் ஜோதி தலைமையிலான குழுவினர் இன்றும், நாளையும் ஆய்வு செய்ய உள்ளனர்.

இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தீட்சிதர்களுக்கு அறிவிப்பு அனுப்பி இருந்தனர். அதில் அறநிலையத் துறையினர் ஆய்வின் போது 2014 முதல் இதுவரையிலான வரவு, செலவு கணக்குகள் மற்றும் தணிக்கை அறிக்கைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Categories

Tech |