தமிழகத்தில் 6-18 வயது வரை உள்ள பள்ளி செல்லா/இடைநின்ற மாற்றுத்திறனாளிகளை வீடு வீடாகச் சென்று கண்டறிந்து பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை சற்றுமுன் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் அனைவரும் கல்வி கற்பதை உறுதி செய்யும் வகையில் மூன்று மாத பயிற்சி வழங்கி, இயலாமையை பொருத்து (மாற்றுத்திறனாளிகள்) பள்ளி அல்லது வீடு வழி கல்வியைத் தொடர ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்கான நடவடிக்கையை முதன்மை கல்வி அலுவலர்கள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
Categories
தமிழகம் முழுவதும் உடனே…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!
