ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் தமிழ்நாட்டின் அமைந்துள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக விளங்குகிறது. இங்கு நாள்தோறும் உள்நாடு மட்டும் இன்றி வெளிநாட்டில் இருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.
அதேபோல் நேற்று விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் முதலை பண்ணை, சிறுவர் பூங்கா உள்ளிட்ட இடங்களை சுற்றி பார்த்தும் எண்ணெய் மசாஜ் செய்து உள்ளனர். இதனால் நகரில் உள்ள அனைத்து ஹோட்டல்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் நகரின் முக்கிய பகுதிகளில் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.