Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் மீ டு புகார் சொல்லும் சின்மயி….. பெரும் சர்ச்சை….! யார் அந்த நபர்?….!!!!

பிரபல பின்னணி பாடகியான சின்மயி பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக தொடர்ந்து பேசி வருகிறார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை வைத்து திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.  இதையடுத்து மீ டு என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்களும் தங்களுக்கு நடந்த பாலியல் தொந்தரவுகளை குறித்து சொல்ல ஆரம்பித்தனர். அதன்பிறகு பாலியல் ரீதியாக பாதிக்கப்படும் பெண்கள் மீ டு விவகாரத்தில் சட்ட மாற்றம் வேண்டும் என்று சின்மயி தொடர்ந்து தனது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் கர்நாடக இசைக் கலைஞர் ஒருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான மாணவி குறித்து பதிவிட்டுள்ளார். அதில் தன்னிடம் இசை கற்றுக்கொள்ள வந்த மாணவி ஒருவரை கர்நாடக இசை கற்பிக்கும் ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார். பாதிக்கப்பட்ட மாணவியும் அவரின் பெற்றோரும் தயவுசெய்து இதை இப்போது பகிர வேண்டாம் என்று சொல்கிறார்கள். குழந்தைகளை இதுபோன்ற வகுப்புக்கு அனுப்பும் போது பெற்றோர்கள் பாதுகாப்பாகவும் ஜாக்கிரதையாகவும் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அந்த கர்நாடக இசைக்கலைஞர் யார் என்று தெரியாத நிலையில் இவரின் பதிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Categories

Tech |