உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொள்ளும் விதமாக உக்ரைனுக்கு ராக்கெட் லாஞ்சர்கள் வழங்க பிரிட்டன் முடிவு செய்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதல் தொடர்ந்து நீடித்து வருகின்றது. இந்த நிலையில் எம்270 ரக ராக்கெட் லாஞ்சர்கள் உக்ரைனுக்கு வழங்க பிரிட்டன் முடிவு செய்திருக்கிறது. மேலும் 80 கிலோ மீட்டர் தொலைவு வரை உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் கொண்டதாக இந்த ராக்கெட் லாஞ்சர்கள் விளங்குகிறது. ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொள்ள தளவாடங்களை நண்பர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என லண்டனில் பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சர் பென் வாலஸ் கூறியுள்ளார்.