Categories
அரசியல் மாநில செய்திகள்

மோடிக்கே கிளாஸ் எடுத்தோம்ல…! இந்தியாவிலே ஸ்டாலின் கெத்து… பாஜகவை உரசிய உதயநிதி …!!

திமுக இளைஞரணி சார்பில் கலைஞரின் 99 வது பிறந்த நாள் கருத்தரங்கம், திராவிட மாடல் பயிற்சி பாசறை தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய திமுக இளைஞர் அணிச் செயலாளரும்,  சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின்,  இங்கு பல பேர் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதென்ன திராவிட மாடல் ஆட்சி ? அதற்கான விளக்கங்களை விளக்குங்கள் என்று கேட்கிறார். அதற்கு ஒரு சிறிய உதாரணம் சொல்கிறேன். திராவிட ஆட்சி என்றால் என்ன என்பதற்கு ?

பத்து நாட்களுக்கு முன்பு நம்முடைய பிரதமர் மோடி அவர்கள் சென்னை வந்திருந்தார். மோடி அவர்களையே மேடையில் வைத்து விட்டு,  இதுதான் திராவிட மாடல் ஆட்சி. இதுதான் மாநில சுயாட்சி என்று மோடிக்கே  தைரியமாகப் பாடம் எடுத்தவர் தான் நம்முடைய தலைவர் அவர்கள். அது தான் திராவிட மாடல் ஆட்சி.

அதே மாதிரி நம்முடைய மாநிலத்துக்கு என்னென்ன தேவை ? என்னென்ன தேவை இல்லை என்பதையும் மோடியிடமே, மோடியை வைத்துக் கொண்டு தெம்பாக,  தைரியமாக  கிளாஸ் எடுத்த இந்தியாவில் ஒரே முதல்வர் என்றால் நம்முடைய தலைவர் அவர்கள் தான். முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களுடைய பிறந்தநாளை முன்னிட்டு இந்த கருத்தரங்கம் இளைஞரணி சார்பில் கலைஞர் அரங்கத்தில் நடைபெறுகின்றது.இது  மிக முக்கியமான நிகழ்வு.

ஏனென்றால் இளைஞரணி சார்பாக நான் பொறுப்பேற்று, இளைஞரணி சார்பில் கலைஞர் அரங்கத்தில் நடைபெறுகின்ற முதல் நிகழ்ச்சி இது. அது கலைஞருடைய பிறந்தநாளில் நிகழ்ச்சியாக இருப்பது எனக்கு மனதிற்கு மிக நெகிழ்ச்சியாக உள்ளது. ஏற்கனவே நடத்தி இருக்க வேண்டும். உங்களுக்கு தெரியும். கொரோனா காலத்துல பெரிய நிகழ்ச்சி 2 வருடங்களாக நடத்த முடியவில்லை. இருந்தாலும் ஜூன் மூன்றாம் தேதி கலைஞருடைய பிறந்த நாளை முன்னிட்டு இளைஞரணி சார்பாக இந்த கருத்தரங்கம் இங்கே நடப்பதில்  மிகப்பெரிய ஒரு பெருமை. அந்த வாய்ப்பை அளித்த தலைவர் அவர்களுக்கும் என்னுடைய நன்றி.

உண்மையை சொல்ல வேண்டுமென்றால் கலைஞர் இன்னும் நம்முடன் தான் இருக்கின்றாடர். அப்படிப்பட்ட எண்ணம் தான் என்னிடம் இருக்கின்றது. அவரின் எண்ணங்கள் தான் நம்மை எல்லாம் வழிநடத்தி செல்வதாக நான் உணர்கின்றேன். ஒரு தாதாவாக அவர் எங்களுக்கு நேரம் தந்ததை விட,  ஒரு தலைவராக நம் அனைவருக்காகவும் நேரம் ஒதுக்கியவர்தான் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள். மிகப் பெரிய ஆளுமைகள் தொடங்கி,  சாமானிய மனிதர்கள் வரை எல்லோருகாக்கவும் ஏதோ ஒரு வகையில் தன்னுடைய நேரத்தை செலவிட்டுள்ளார், ஒதுக்கி தந்துள்ளார்.

பல்வேறு துறையைச் சேர்ந்த ஆளுமைகளுடன் எளிய மக்களுடன் அவர் நேரடியாக உரையாடி இருக்கிறார். அவர்களுக்காக தன் வாழ்நாளின்  பெரும்பகுதியை செலவழித்து இருக்கின்றார் என்பது எவ்வளவு பெரிய  விஷயம். இந்த சந்திப்புகள், உரையாடல்கள் தான், அவரை ஏகப்பட்ட சமூக நிதி திட்டங்களை திட்ட வைத்தன. அதன் மூலமாகத்தான் கோடிக்கணக்கான தமிழக மக்களுடைய வாழ்வில் அவர் ஒன்றிணைந்துள்ளார்.

இதுதவிர பொதுக் கூட்டங்களில் பேசுவது, முரசொலிக்காக  எழுதுவது,  வாசிப்பது என தன் வாழ்நாள் முழுவதையும் எளிய மக்களின் மேன்மைக்காக வடிவமைத்துக் கொண்டவர் தான் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள். இப்படி மனிதர்களையும்,  தன் நேரத்தையும்,  பணிகளையும் கையாள்வது என்பது மிகப்பெரிய ஒரு கலை. அந்த கலையை ஏழை எளிய அடித்தட்டு மக்களின் மேன்மைக்காக கலைஞர் பயன்படுத்தினார் என்பது தான் முத்தமிழறிஞர் கலைஞரின் சிறப்பு என உதயநிதி தெரிவித்தார்.

 

Categories

Tech |