Categories
உலக செய்திகள்

ரூ 63,49,23,80,00,000 சொத்து…. தொழிலதிபர் .எடுத்த அதிர்ச்சி முடிவு …!!

பிரபல அமெரிக்க தொழிலதிபர் வாரன் பஃபெட், தனது நாளிதழ் தொழில்களை முற்றிலுமாகக் கைகழுவும் முடிவுக்கு வந்துள்ளார்.

பெர்க்‌ஷியர் ஹாத்வே (Berkshire Hathaway) எனப்படும் ஒற்றை நிறுவனத்தின் கீழ் பல்வேறு கிளை நிறுவனங்களை நிறுவி, அதனை சிறப்பான முறையில் நிர்வகித்துவருபவர் வாரன் பஃபெட். சர்வதேச அளவில் நான்காவது பெரும் பணக்காரராக விளங்கும் இவரின் வர்த்தகச் சொத்து மதிப்பு மட்டும் 88.9 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.

பங்குச்சந்தையில் தனது வியாபார நுண்ணறிவின் மூலம், சரியான இடத்தில் மூதலீடு செய்து, வெற்றிகரமான தொழிலதிபராக வலம்வரும் இவரின் வாழ்க்கை, உலகம் முழுவதும் சுயதொழில் முனைவோருக்கு சிறந்த பாடமாக அமைந்துள்ளது.

தனது வாழ்க்கைப் பயணத்தை ‘வாஷிங்டன் போஸ்ட்’ இதழின் டெலிவரி பாயாகத் (delivery boy) தொடங்கிய இவர், தற்போது உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முன்னிலை வகிக்கிறார். இருப்பினும், வந்த வழியை மறவாதவறாய், பி.ஹெச். மீடியா குழுமம் (BH Media Group) என்ற நிறுவனத்தை உருவாக்கி அதன் கீழ் பல்வேறு நாளிதழ் நிறுவனங்களை நடத்திவந்தார். தன்னை ஒரு ‘செய்தித்தாள் அடிக்ட்’ என்றும் நாளிதழ் நடத்துவதன் மூலம் ஒரு திருப்தி கிடைப்பதாகவும் குறிப்பிடும் இவர், ஊடக வணிக நிறுவனங்களுக்கு முன்மாதிரியாக விளங்கிவந்தார்.

இந்நிலையில், தனது நாளிதழ் நிறுவனங்களை லீ என்டர்பிரைசஸ் எனப்படும் தனியார் நிறுவனத்துக்குச் சுமார் 140 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்பதற்கு வாரன் பஃபெட் தற்போது முடிவெடுத்துள்ளார். அதன்படி, வருகின்ற மார்ச் இறுதிக்குள் இந்தக் கைமாறுதல் முழுமையடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 10 ஆண்டுகளில் உலகம் முழுவதும் இணையதளத்தின் அபரீத வளர்ச்சியினால், நாளிதழ் வணிகம் குறைந்துவிட்டதாகக் கருதப்படும் நிலையில், பெரும் தொழிலதிபரின் இந்தத் திடீர் முடிவு ஊடக உலகில் பயணிப்போருக்கு அதிர்ச்சிகரச் செய்தியாக அமைந்துள்ளது.

Categories

Tech |