Categories
சென்னை மாவட்ட செய்திகள்

போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை…. காரணம் என்ன? என்று தீவிர விசாரணை….!!!!

மணலியில் போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, மணலி காவலர் குடியிருப்பில் வசித்து வந்தவர் 35 வயதுடைய சிவகுமார். இவர் ஆர்.கே. நகர் போலிஸ் நிலையத்தில் குற்றப் பிரிவில் முதல் நிலை காவலராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு சங்கீதா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளார்கள். சிவகுமார் மது அருந்தும் பழக்கம் உள்ளவர். இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கடந்த வாரம் சங்கீதா குழந்தைகளை கூட்டிட்டு தாய் வீட்டிற்கு சென்று விட்டார். ஒரு வாரமாக சிவக்குமார் வீட்டில் தனியாக இருந்தார்.

இந்நிலையில் நேற்று சங்கீதா கணவர் வீட்டிற்கு வந்தார். அப்போது உள்ளே சென்று பார்த்தபோது படுக்கை அறையில் சிவகுமார் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே சங்கீதா இதுகுறித்து மணலி காவல் நிலையத்தில் தகவல் அளித்தார். இத்தகவலின்பேரில் மணலி காவல்துறையினர் வழக்குப் பதிந்து சிவகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |