நடிகை மீரா ஜாஸ்மின் நீண்ட வருடங்களுக்கு பிறகு தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளார்.
தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகையாக வலம் வந்த மீரா ஜாஸ்மின் சில வருடங்களாக தமிழில் நடிக்கவில்லை. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்துள்ளார். இவர் தமிழில் ரன், புதிய கீதை, ஆஞ்சநேயா ஆயுத எழுத்து, சண்டக்கோழி, திருமகன் என பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
இவர் 2014ஆம் வருடம் வெளியான விஞ்ஞானி திரைப்படத்திற்கு பிறகு தமிழில் நடிக்கவில்லை. மலையாள படங்களில் மட்டும் சிறப்பு தோற்றங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் இவர் தமிழ் சினிமா உலகில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்க முடிவெடுத்திருக்கிறார். அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றார். மேலும் தனது போட்டோக்களையும் இணையத்தில் பகிர்ந்து வருகின்றார்.