இரையுமன்துறை கடற்பகுதி கரையில் காயத்துடன் தவித்துக் கொண்டிருந்த வெளிநாட்டவருக்கு கடற்படையினர் சிகிச்சையளித்து விசாரணை செய்தார்கள்.
கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு அருகே இருக்கும் இரையுமன்துறை கடற்கரை கரையில் இரண்டு நாட்டிக்கல் கடல்மைல் தூரத்தில் வெளிநாட்டு மர்ம படகு ஒன்று நேற்று மாலையில் நங்கூரமிட்டு நின்று கொண்டிருந்ததை பார்த்த அப்பகுதி மக்கள், கடலோர காவல் படைக்கு தகவல் கொடுத்ததை அடுத்து சிறிய படகு மூலம் அங்கு சென்று விசாரணை செய்தார்கள்.
விசாரணையில் நெதர்லாந்து நாட்டைச் சார்ந்த ஜெயின் என்பதும் படகு ஓட்டுநர் பயிற்சியாளராக இருக்கிறார் என்பதும் அடிக்கடி கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்துக்கு வந்து அங்குள்ள நபர்களுக்கு படகு ஓட்டுதல் பயிற்சி வழங்கி வருவதாகவும் கூறினார். கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால் கரை ஒதுங்க முடியாமல் நங்கூரமிட்டு நின்றதாகவும் தெரிவித்தார். இதையடுத்து கடற்படையினரின் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை பரிசோதனை செய்து அவரின் காலில் கயிறில் சிக்கி காயம் ஏற்பட்டதையடுத்து முதலுதவி சிகிச்சை அளித்து விட்டு அங்கிருந்து வந்தார்கள்.