Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

அதிகமாக “டீ” குடிப்பவர்களா நீங்கள்.. இதை தெரிந்து கொள்ளுங்கள்..”டீ “குடிப்பதை விட்டு விடுவீர்கள்..!!

இப்பொழுது இருக்கும் காலகட்டத்தில் தண்ணீர் பருகுவதைத் மறந்து வேலை பார்ப்பவர்கள் முதல் வீட்டில் இருப்பவர்கள் வரை அதிக அளவில் பருகும் பானம் டீ ஆகும். டீ குடிப்பது மக்கள் பலரின் அன்றாட பழக்கமாகவும், பொழுதுபோக்காகவும் உள்ளது.

  • அலுவலகத்தில் வேலை பார்க்கும் நபர்கள்  கூட  டீ குடிப்பதை பழக்கமாக்கி கொண்டுள்ளனர். வேலையின் இடைவேளை அந்த குறிப்பிட்ட நேரம் வந்ததும் அவர்கள்  டீ குடித்தால் தான் பணி செய்ய முடியும் என்ற மனநிலைக்கு சென்று விடுகிறார்கள்.
  • அதிகமாக டீ குடித்தால், அதில் இருக்க கூடிய, அதிக அளவிலான நச்சுக்களால் நம் உடலில் கவன சிதறல், அமைதி இல்லாமல் போக செய்வது, தூக்கம் இல்லாமல் போவது,  மனம் அலைபாய்ந்து கொண்டு இருக்கும், ஒரு நிதானம் இல்லாமல் இருக்க கூடும்.
  • டானிஸ் என்னும் வேதிப்பொருள் டீ ல் இருக்கிறது. எனவே டீ அதிகம் பருகவதால் உடலில் இரும்புச்சத்து சேரவிடாமல் அதன் தன்மையை தடுத்து விடும். புற்றுநோய்க்கு  முக்கியமான ஒன்றாக கொடுக்கப்படும் ஹீமோதெரபி , சிகிச்சை பலன் அளிக்காமலும் போக வாய்ப்புள்ளது. காரணம் என்ன வென்றால் நாம் அதிக அளவில் டீ குடிப்பதால், ஹீமோதெரபி மருந்துகள் உடலில் வேலை செய்யாமல், அதன் தன்மையை செலயலிழக்க செய்து விடும்..
  • ஒரு நாளைக்கு சராசரியாக இரண்டு கப் டீ குடிப்பது போதுமானது. அதற்கு அதிகமாக டீ குடிப்பதும் அடிக்கடி டீ குடிக்க பழகி கொள்வதும் உடல் நலத்திற்கு மிகுந்த கேடு விளைவிக்கும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
  • மேலும் டீ குடிப்பவர்களுக்கு 40% மூட்டுவலி  ஏற்படவாய்ப்புள்ளது என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். எலும்பின் உறுதிக்குத் துணைபுரிகிற அதே டீ தான், எல்லை மீறும் போது எலும்பின் உறுதியைப் பாதிக்கிறது.
  • பற்களின் சிதைவுக்கும் அதிக அளவு டீ குடிப்பது தான் காரணம் என்று கூறப்படுகிறது. மேலும் டீ குடிப்பவர்களுக்கு 40% மூட்டுவலி ஏற்படவாய்ப்புள்ளது என்கிறார்கள்  மருத்துவ நிபுணர்கள்.
  • புராஸ்டேட் புற்று நோய், உணவுக் குழாய் புற்றுநோய் போன்றவை ஏற்படுவதற்கு டீயும் ஒரு காரணமாகவும் அமைந்துவிடலாம் என்று சில மருத்துவ ஆய்வுகள் சொல்கின்றன. டீ-யில் டோனிக் அமிலம் உள்ளது.
  • இது உடலில் இரும்புசத்து கிரகித்துக்கொள்வதை தடுத்து அனீமியாவை  உண்டாக்க காரணமாகிறது.

Categories

Tech |