Categories
மாநில செய்திகள்

தனியார் பள்ளிகளில் 10% – 20% கட்டணம் உயர்கிறது?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தில் கடந்த வருடங்களில் கொரோனா காரணமாக மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. இதனிடையே தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணத்தை செலுத்த கூறி பெற்றோர்களை வலியுறுத்தினர். ஊரடங்கு காரணமாக பொது மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு பொருளாதார ரீதியாக சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில் கல்வி கட்டணத்தை எவ்வாறு செலுத்துவது என்று பெற்றோர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

அது மட்டுமல்லாமல் தனியார் பள்ளிகள் கல்வி கட்டணத்தை செலுத்த கூறி மாணவர்களை வற்புறுத்தியது. இதுதொடர்பாக பெற்றோர்கள் புகார் அளித்தனர். இதையடுத்து பொருளாதார சூழலை கருத்தில் கொண்டே 75 சதவீதம் மட்டுமே கல்வி கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி கடந்த கல்வியாண்டில் 75 சதவீதம் கல்வி கட்டணம் மட்டுமே வசூல் செய்யப்பட்டது. அதனைப் போலவே 2022-2023 ஆம் கல்வியாண்டிலும் தனியார் பள்ளிகளில் 75% கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டுமென்ற முதன்மை கல்வி அலுவலர் அறிவுறுத்தியுள்ளார்.

கடந்த கல்வி கட்டணத்தின் படி புதிய கல்வியாண்டில் கட்டணம் வசூலிக்கக் கூடாது. மாணவர் சேர்க்கையின்போது நன்கொடை,கட்டிட நிதி மற்றும் அறக்கட்டளை நிதி என்ற மறைமுக கட்டணங்கள் எதுவும் வசூல் செய்யக்கூடாது என்றும் இந்த உத்தரவை மீறி கூடுதல் கட்டணம் வசூலித்தால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ளதால், கடந்த ஆண்டு போல அல்லாமல், 100 சதவீத கட்டணம் வசூலிக்க அரசு அனுமதிக்க வேண்டுமென, தனியார் பள்ளிகள் வலியுறுத்தி வருகின்றன.தனியார் பள்ளிகளில் 10 முதல் 20 சதவீதம் வரை கட்டணம் உயர்த்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ள நிலையில் இது குறித்த அறிவிப்பு அடுத்த மாதம் தெரிந்துவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக கடந்த ஆண்டுகளில் ஆன்லைன் வகுப்புகள் மட்டும் நடைபெற்றதால் 75% முதல் 80% வரை கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட்டது. தற்போது மீண்டும் நேரடி வகுப்புகள் நடைபெற உள்ளதால் 2,300- க்கும் மேற்பட்ட பள்ளிகள் முழு கட்டணத்தை பெற கோரிக்கை வைத்துள்ளன.

Categories

Tech |