புதுக்கோட்டையில் இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பரத்தை பார்த்து Diggi Price என்ற ஆன்லைன் ஷாப்பிங்கில் 1500 ரூபாய் மதிப்புள்ள வாட்ச் ஒன்றை ஆர்டர் செய்த நபருக்கு வெறும் வாட்ச் வார் மட்டும் வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை நகர பகுதிக்கு உட்பட்ட காந்திநகர் ஆறாம் வீதியை சேர்ந்த நபர் தீபக் ராஜ். இவரது தங்கை கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பரத்தை பார்த்து ஆன்லைன் ஷாப்பிங்கில் 1,500 ரூபாய் மதிப்புள்ள வாட்சை தீபக் ராஜ் பெயரில் ஆர்டர் செய்துள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள டிடிடிசி கொரியர் மூலம் வாட்ச் வந்தது. இதையடுத்து கொரியர் கொடுப்பவர் தீபக் ராஜ் இடம் 1,500 ரூபாயை பெற்றுக் கொண்ட ஓடிபி எண்ணை பெற்று வாட்ச் டெலிவரி கொடுத்ததற்கான குறுந்தகவல்களை பெற்று விட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.
இதையடுத்து தீபக் அந்த பார்சலை பிரித்து பார்க்கும் போது அதில் வாட்ச் மாதிரியான கூடு மட்டும் இருந்தது . இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தீபக் ராஜ் உடனடியாக சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு சென்று கொரியரில் வந்த வாட்சை காண்பித்துள்ளார். இதற்கு கொரியர் நடத்தும் நிறுவனங்கள் பொருள் வந்தால் அதை டெலிவரி செய்வது மட்டுமே எங்களுடைய வேலை. நீங்கள் ஆர்டர் செய்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு கேளுங்கள் என்று கூறியுள்ளார். இதைதொடர்ந்து தனது தங்கை ஆர்டர் செய்த முகவரியைக் கொண்டு Diggi Price என்ற நிறுவனத்தை தொடர்பு கொண்டபோது அந்த நிறுவனத்தின் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இந்த சம்பவம் ஆன்லைன் ஷாப்பிங் செய்பவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.