மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 5 சதவீதம் உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் சம்பளம் உயரும்.
மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்த நல்ல செய்தி ஜூலையில் வரவுள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஜூலை 1 ஆம் தேதி முதல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஊழியர்களின் அகவிலைப்படியானது 39 சதவீதமாக உயரலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த உயர்வை தொடர்ந்து ஊழியர்களின் சம்பளமும் அதிரடியாக மாறும். மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப் படி ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை உயர்த்தப்படும்.
ஜனவரி மற்றும் ஜூலை மாதத்தில் உயர்த்தப்படும். ஆனால் பணவீக்கத்தைப் பொறுத்து அகவிலைப்படி உயர்த்தப்படாமல் போகலாம். 2022 ஜனவரி மாதத்தில் அனைத்து இந்திய நுகர்வோர் விலை குறியீடு 125.1 புள்ளியாக இருந்தது. அது பிப்ரவரியில் 125 சரிந்தது. இதன் அடிப்படையில் மார்ச் மாதத்திலும் குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு புள்ளி மட்டும் உயர்ந்த 126 வரை இருந்தது. ஜூலை மாதத்தில் அகவிலைப்படி 5 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளது. அவ்வாறு உயர்ந்தால் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 32 சதவீதத்திலிருந்து 39 சதவீதமாக உயரும். ஏப்ரல், மே மாதங்களுக்கான புள்ளிவிவரங்கள் இன்னும் வராத காரணத்தினால் நுகர்வோர் விலைக் குறியீடு அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே அகவிலைப்படி உயர்வை ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர்.