மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேருந்து நிலையத்தில் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை பகுதியில் பேருந்து நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் இருந்து தினமும் திருச்சி, ராமநாதபுரம், ராமேஸ்வரம், வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏராளமான பேருந்துகள் இயக்கப்படுகிறது.
ஆனால் இந்த பேருந்து நிலையத்தில் கழிவறை, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாததால் தற்போது புதிய பேருந்து நிலையம் கட்ட முடிவு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், எஸ். எஸ். பழனிமாணிக்கம் உள்ளிட்ட பலர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர்.