தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு கொரோனா காரணமாக மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இதனையடுத்து மத்திய மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக கொரோனா கட்டுக்குள் வந்தது. இதனால் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டது. இதனால் மக்கள் தங்களுடைய இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். மேலும் வழக்கம் போல பொதுத் தேர்வுகளும் நடத்தி முடிக்கப்பட்டு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வரும் பத்தாம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக சென்னையில் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
சென்னையில் குடியிருப்பு பகுதிகளில் தொடங்கியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், சென்னையில் 9 13வது மண்டலங்களில் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. ஐஐடி போன்ற இடங்களில் வெளிமாநிலங்களில் இருந்து மாணவர்கள் வருவதால் தொற்று அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களில் குரங்கு காய்ச்சல் பரிசோதனை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பள்ளிகள் திறக்கப்படும் போது மாணவர்கள் கட்டாயம் அணிய வேண்டும் என்பது தொடர்பாக முறையான அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார். ஜூன் மாதம் கொரோனா நான்காவது அலை தொடங்கும் என மருத்துவ நிபுணர்கள் கூறி வந்த நிலையில் தற்போது அதிகரிக்கும் கொரோனா மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்னொரு கொரோனாவோ அதனால் ஏற்படுத்தப்படும் ஊரடங்கையோ தாங்க முடியாது என பொதுமக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.