தமிழகத்தில் முதல்முறையாக சுற்றுலா பயணிகளுக்காக சொகுசு கப்பல் திட்டத்தை முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னையிலிருந்து புதுச்சேரி, விசாகப்பட்டினத்தில் சொகுசு கப்பலில் பயணம் செய்து கடல் அழகை ரசிக்கலாம். இரண்டு நாள், மூன்று நாள், நான்கு நாள், ஐந்து நாள் என்ற வகையில் சொகுசு கப்பல் பயண திட்டங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. கட்டணங்களை பொருத்தவரை தனியார் நிறுவனமே நிர்ணயம் செய்யும்.
2 நாள் திட்டத்திற்கு ஒரு நபருக்கான ஆரம்ப கட்டணம் ரூ.22,915. அது அறைகளின் அளவு, வசதிகள், கடல் அழகை ரசிக்கும் வகையிலான அமைப்பு என 29,568 ரூபாய், 50,000 ரூபாய் மற்றும் 80,000 ரூபாய் என மாறுபடுகிறது. 5 நாள் திட்டத்திற்கு 54 ஆயிரம் ரூபாயிலிருந்து 2.37 லட்ச ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கப்பலில் உணவகங்கள், விளையாட்டு தளங்கள், திரையரங்கம், விருந்து, கொண்டாட்டங்கள் மட்டுமல்லாமல் ஆழ்கடல் பகுதியில் திருமணங்கள், அலுவலக மீட்டிங்குகளும் நடத்தலாம்.