Categories
சினிமா

அட்லீ இயக்கத்தில் பாலிவுட் திரைப்படம்…. டீசரை வெளியிட்ட படக்குழு…. வைரல்….!!!!

கடந்த 2013 ஆம் வருடம் வெளியாகிய “ராஜா ராணி” படம் வாயிலாக இயக்குனராக அறிமுகமான அட்லீ, தன் முதல் படத்திலேயே முத்திரை பதித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இதையடுத்து இவர் விஜய் நடிப்பில் தெறி, மெர்சல், பிகில் என ஹாட்ரிக் வெற்றி படங்களை கொடுத்து தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனரானார்.
இப்போது அட்லீ ஒரு பாலிவுட் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதன் வாயிலாக பாலிவுட் திரை உலகில் அட்லீ அறிமுகமாகிறார். இவற்றில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் கௌரிகான் தயாரிக்கும் இந்த படம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. இதன் படப்பிடிப்பு முழுவீச்சில் நடந்து வருகிறது.
இந்த நிலையில் இத்திரைபடத்தின் டீசரை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதாவது “ஜவான்” என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படம் 2023-ஆம் வருடம் ஜூன் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. அனிருத் இசை அமைத்திருக்கும் இந்த படத்தின் டீசர் தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |