Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

சிகரெட் வாங்கி தர மறுத்த சிறுவன்…. கையை பிளேடால் அறுத்த வாலிபர்…. பரபரப்பு சம்பவம்…!!

சிகரெட் வாங்கி வர மறுத்த சிறுவனின் கையை வாலிபர் பிளேடால் அறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தணிகைபோளூர் கிராமத்தில் கோபி(30) என்பவர் வசித்து வருகிறார். இவர் பக்கத்து தெருவில் வசிக்கும் 12 வயது சிறுவனிடம் சிகரெட் வாங்கி வருமாறு கூறியுள்ளார். அதற்கு சிறுவன் மறுப்பு தெரிவித்து விட்டு விளையாட சென்றுவிட்டார். இதனால் கோபமடைந்த கோபி வீட்டிற்கு சென்று கொண்டிருந்த சிறுவனின் கையை பிளேடால் அறுத்துள்ளார்.

இதனை அடுத்து ரத்தம் சொட்டிய நிலையில் வலியால் துடித்துக் கொண்டிருந்த சிறுவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சிறுவனின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவான கோபியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |