மணிமேகலை விலை உயர்ந்த பைக் ஒன்றை வாங்கி தனது கணவருக்கு பிறந்த நாள் பரிசாக வழங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மணிமேகலை முதலில் சன் டிவியில் தொகுப்பாளராக அறிமுகமாகி பின் சன் மியூசிக்கில் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த பொழுது உசேன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பின் சன் டிவியில் இருந்து விலகி விஜய் டிவிக்கு சென்று மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை, குக்கு வித் கோமாளி என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகின்றார்.
இந்நிலையில் தனது கணவரின் பிறந்த நாளுக்கு சர்ப்ரைஸ் கிப்ட் ஆக புதிய பி.எம்.டபிள்.யூ பைக் ஒன்றை வாங்கி கொடுத்து இருக்கின்றார். அந்த வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றார். அதற்கு தற்போது லைக்குகள் குவிந்து வருகின்றது.