Categories
தேசிய செய்திகள்

இனி திருப்பதிக்கு இதை எடுத்து செல்லக்கூடாது…. பக்தர்களுக்கு தேவஸ்தானம் அதிரடி அறிவிப்பு….!!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். தற்போது கோடைகாலம் என்பதால் நாளுக்கு நாள் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதனால் தேவஸ்தானம் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பதற்கு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

அதன்படி பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது திருப்பதிக்கு வரும் பக்தர்கள் அனைவரும் பிளாஸ்டிக் போன்ற எளிதில் மக்காத பொருட்களை கொண்டு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி தண்ணீர் பாட்டில்கள், ஷாம்பு, தலைக்கு தடவ பயன்படும் எண்ணெய் உள்ளிட்ட பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் தேவஸ்தானத்தில் இயங்கக்கூடிய கடைகளிலும் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதனால் தேவஸ்தானத்தில் கண்ணாடி பாட்டில்களில் தற்போது தண்ணீர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் ஒரு பாட்டிலின் விலை 80 ரூபாயாக உள்ளது. இதில் பாட்டிலை திரும்ப கொடுப்பவர்களுக்கு 50 ரூபாய் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பக்தர்களுக்கு வழங்கக்கூடிய அனைத்து பொருட்களையும் எளிதில் மக்கும் தன்மையுள்ள பிளாஸ்டிக் கவர்களில் தான் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை மீறி செயல்படுவோர்க்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |