டெல்லியில் ஆத்மி கட்சியின் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது தலைமையிலான அமைச்சரவையில் சுகாதாரத் துறை அமைச்சராக சத்யேந்திர ஜெயின் இருந்தார். இவர் அப்போது உள்துறை, மின்சாரம் பொதுப்பணித்துறை, தொழில் நகர்புற வளர்ச்சி உள்ளிட்ட முக்கிய இலோகாக்களையும் கவனித்து வந்தார். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு சத்தியேந்திர ஜெயின் மற்றும் அவரது குடும்பத்தினர் ரூ.1.62 கோடி வரை பணம் மோசடி செய்துள்ளது என்று சிபிஐ வழக்கு பதிவு செய்தது. சிபிஐ முதல் தகவல் அறிக்கை அடிப்படையில் பண மோசடி குற்றச்சாட்டுகள் குறித்து அமலாக்கத் துறையின் விசாரணையை தொடங்கியது. அப்போது கொல்கத்தாவை சேர்ந்த நிறுவனத்துடன் ஹவாலா பரிவர்த்தனைகளில் ஈடுபட்டுள்ளார் என்று சத்யேந்திர ஜெயின் கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து அவர் கவனித்த இலோக்கங்களை துணை முதல்வர் மனிஷ் சிசோடியிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியது, “நான் ஏற்கனவே சத்யேந்திர ஜெயின் மீது பொய்வழக்குகள் போடப்பட்டு கைது செய்யப்படுவார் என்று கூறியது போல நடந்து விட்டது. அதனை போலவே இப்போது எனக்கு சில நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து அடுத்ததாக மனிஷ் சிசோடியா கைது செய்யப்படுவார் என்று தகவல் வந்துள்ளது. இதற்கான போலியான வழக்குகளையும் அவருக்கு எதிராக தயார் செய்யும்படி மத்திய விசாரணை அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது என்று அவர் கூறினார். மேலும் மோடியிடம் ஒரு கோரிக்கை என்று அவர் கூறியது, ஆம் ஆத்மியின் அனைத்து எம்எல்ஏக்களையும் ஒரே நேரத்தில் கைது செய்து, எங்களை சிறையில் தள்ளி விடுங்கள். அனைத்து விசாரணை அமைப்புகளை ஒரே நேரத்தில் சோதனை நடத்த சொல்லுங்கள். கைது நடவடிக்கைகளால் மக்கள் பணி தடைபடுகிறது என்று தெரிவித்துள்ளார்.