தமிழகத்தில் ஆம்னி பேருந்து கட்டணம் பல மடங்கு உயர்ந்து இருப்பது பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது பள்ளி விடுமுறை காலம் என்பதால் பெரும்பாலான மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று உள்ளனர். இதனைப் பயன்படுத்திக் கொண்ட ஆம்னி பேருந்துகள் சென்னையிலிருந்து மதுரை செல்வதற்கு 2,000 ரூபாய் வரை கட்டணம் வசூல் செய்து வருகின்றது. பள்ளி கோடை விடுமுறை இறுதி வாரத்தை எட்டி உள்ளதால் சொந்த ஊருக்கு சென்றுவிட்டு திரும்பி வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த சூழலைப் பயன்படுத்திக்கொண்டு பேருந்து கட்டணத்தை உயர்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Categories
பேருந்து கட்டணம் பல மடங்கு உயர்வு…… தமிழகத்தில் செம ஷாக்….!!!!
