பூதப்பாண்டி அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவிலில் பொதுமக்கள் திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அறநிலையத்துறைக்கு சொந்தமாக பூதலிங்கசாமி, சிவகாமி அம்பாள் கோவில் இருக்கின்றது. இந்த கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்று 22 வருடங்கள் ஆகின்றதையடுத்து கோவில் கும்பாபிஷேகம் நடத்த வேலைகள் நடந்து வருகின்றது. கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கு முன்பு சாமி சிலைகளை வெளியே கொண்டுவந்து பல வகையான மூலிகை மூலம் மருந்து சாத்தும் பாலாலயம் என்ற சிறப்பு பூஜை நடைபெறும்.
இதனால் கோவிலின் ஸ்ரீகரியம் பொதுமக்கள் மற்றும் பக்தர்களிடம் தகவல் எதுவும் கொடுக்காமல் நேற்று இரவு பாலாலய பூஜைக்காக பணியாளர்களை அழைத்ததாக கூறப்படுகின்றது. இது ஊர் மக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் தெரிந்து கோவிலில் இரவு 7 மணிக்கு ஸ்ரீகாரியத்தின் செயலை கண்டித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
மாவட்ட கோவில்களில்ன் இணை ஆணையர், ஸ்ரீகாரியம் உள்ளிட்டோர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இல்லையெனில் சாலையில் மறியலில் ஈடுபட போவதாக கூறினார்கள். இதையடுத்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போனில் தொடர்பு கொண்டு காலையில் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறிய பிறகு உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.