தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் ஆதிதிராவிட நலத்துறை சார்பில் 98 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட சமுதாய கூட கட்டிடத்தை தமிழக ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் திருமதி கயல்விழி செல்வராஜ் திறந்து வைத்துள்ளார். அதன்பின் மாவட்ட ஆட்சியர் பிரியதர்ஷினி தலைமையில் நடைபெற்ற விழாவில் ஒரு கோடியே 94 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியுள்ளார். மேலும் கடந்த ஒரு ஆண்டுகால சிறப்பான ஆட்சி நடைபெறுவதற்கு காரணம் முதல்வர் தளபதியின் திட்டங்கள் செயல்பாடுகள் தான் அதேபோல பெண்கள் சமுதாயம் முன்னேற்றமடைய கல்வி அவசியமாகும்.
அனைவரும் கல்வி பயில வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசும் போதும் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 84.1 சதவீதம் கல்விக்காக ஒதுக்கப்பட்ட இருக்கின்றது. அதனால் பெண்கள் அனைவரும் கட்டாயம் கல்வி கற்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் ஆதிதிராவிட நலத்துறை சார்பில் இலவச தையல் மிஷின் சலவைப்பெட்டி வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட ரூபாய் 1 கோடியே 94 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கியுள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியில் தாட்கோ மாநில தலைவர் மதிவாணன், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டி ஆர் செந்தில்குமார், பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜிகே மணி மற்றும் அரசு அதிகாரிகள் பயனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.