Categories
டெக்னாலஜி பல்சுவை

“வாட்ஸ் ஆப் மெசேஜையும் எடிட் செய்யலாம்”….. அறிமுகமாகும் புதிய வசதி….!!!

வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்கள் தேவையறிந்து தொடர்ந்து பல்வேறு புதுப்புது அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி வாட்ஸ்அப் நிறுவனம் தற்போது புது அம்சத்துக்கான சோதனையில் ஈடுபட்டு வருகிறது. வாட்ஸ்அப் தளத்தில் தற்போது வரை பிரத்யேக எடிட் பட்டன் ஏதும் இல்லாத நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் பீட்டா பதிப்பில் எடிட் ஆப்ஷன் அம்சத்தை சோதனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த எடிட் ஆப்ஷன் அம்சத்தின் மூலம் பிறருக்கு அனுப்பிய செய்திகளை திருத்தலாம். டுவிட்டர் நிறுவனத்தை விட வாட்ஸ்அப் விரைவாக எடிட் ஆப்ஷன் அம்சத்தை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |