Categories
தேசிய செய்திகள்

குஷியோ குஷி…. அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு…. எவ்வளவு தெரியுமா….? வெளியான ஹேப்பி நியூஸ்…!!!

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 2020-ஆம் ஆண்டு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த அகவிலைப்படியானது ஒரு வருடத்திற்கு பிறகு 34 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய, மாநில அரசுகள் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது 7-வது ஊதியக் குழு பரிந்துரையின் பேரில் அகவிலைப்படியானது 34 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து மகாராஷ்டிரா மாநிலத்தில் அகவிலைப்படி  5 தவணைகளாக பிரிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. இதில் 2 தவணைகள் ஏற்கனவே வழங்கப்பட்ட நிலையில் 3-வது தவணையை வழங்குவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் 17 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அகவிலைப்படி உயர்வால்  அரசு ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சம்பளம் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை உயரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |