Categories
அரசியல்

உங்க ஏடிஎம் கார்டு தொலைந்து போச்சா?…. நோ டென்ஷன்…. உடனே இத மட்டும் பண்ணுங்க போதும்….!!!!

வங்கி கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும் ஏடிஎம் கார்டு என்பதை மிக முக்கியமான ஆவணம். இந்த கார்டு சில நேரங்களில் தொலைந்துவிடும். ஒரு சில நேரங்களில் அது திருடு போகவும் அதிக வாய்ப்பு உள்ளது. ஒருவேளை உங்களுடைய ஏடிஎம் கார்டு தொலைந்து விட்டால் அல்லது யாராவது திருடிவிட்டால் உடனே முதலில் அதனை செயல் இழக்க செய்ய வேண்டும்.

இல்லையென்றால் பணம் அனைத்தும் திருடப்பட்ட அதிக வாய்ப்புள்ளது. உங்களுடைய ஏடிஎம் கார்டு பிளாக் செய்வதற்கு வங்கியை அணுக வேண்டிய அவசியமில்லை. அமர்ந்த இடத்தில் இருந்து கொண்டே அந்த வேலையை முடிக்கலாம். அப்படி நீங்கள் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி வாடிக்கையாளராக இருந்தால் உங்களுடைய ஏடிஎம் கார்டு தொலைந்து விட்டால் அதனை எப்படி பிளாக் செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

முதலில் உங்களுடைய பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரில் இருந்து 08467974343 என்ற நம்பருக்கு போன் செய்ய வேண்டும். அப்படி செய்த உடனே உங்களுடைய கார்டை பிளாக் செய்யப்பட்டுவிடும். இது இல்லாமல் 04426223106 அல்லது 04426223109 என்ற எண்களுக்கு அழைத்து புகார் அளிக்கலாம். இதில் முக்கியமானது என்னவென்றால் உங்கள் ஏடிஎம் கார்டை பிளாக் செய்து விட்டால் அதனை மீண்டும் பயன்படுத்த முடியாது.

நீங்கள் புதிய கார்டு தான் வாங்க வேண்டும். மேலும் இந்த எண்கள் அனைத்தும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே ஆக்டிவாக இருக்கும். இதனைப் போலவே ஒவ்வொரு வங்கிக்கும் தனித்தனியாக கஸ்டமர் கேர் எண்கள் உள்ளது. அதற்கு தொடர்பு கொண்டு நீங்கள் உங்களுடைய கார்டை பிளாக் செய்ய முடியும்.

Categories

Tech |