Categories
சினிமா தமிழ் சினிமா

“வனிதாவின் அடையாளம் தெரியாத புது லுக்”…. குவிந்து வரும் கமெண்ட்…!!!!!!

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் சின்னத்திரையிலிருந்து நடிகை வனிதாவிற்கு வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. அதனைத் தொடர்ந்து சினிமாவில் தொடர்ச்சியாக வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றது. இந்த நிலையில் வனிதாவின் புதிய தோற்றம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது பல சர்ச்சைகள் வனிதாவை சுற்றி அரங்கேறின. அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல பேர் தங்கள் கருத்துக்களை வலைதளத்தில் பகிர்ந்து வந்தனர்.

ஆனால் பிக்பாஸில் இருந்து வெளியேறியபின் குக்கு வித் கோமாளி, கலக்கப்போவது யார்? பிக்பாஸ் ஜோடிகள் என பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். சினிமாவிலும் நடித்து வரும் வனிதா  யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகின்றார். அனிதாவிற்கு ஏற்கனவே 2 முறை திருமணம் ஆகி பின் அந்த இரண்டு திருமணங்களும் விவாகரத்தில் முடிந்தது. அதன்பின் பீட்டர் போல் என்பவரை திருமணம் செய்துகொண்டு அவரையும் விட்டு பிரிந்துள்ளார்.

தற்போது மகளுடன் தனியாக வசித்து வருகின்றார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் வனிதா விஜயகுமார் அவ்வப்போது தான் நடிக்கும் புகைப்படங்கள் மற்றும் தனது குழந்தைகளின் புகைப்படங்களை பதிவு செய்து வருவார்.  அந்த வகையில் சற்றுமுன் வனிதா கோட் சூட் மற்றும் பாப் கட்டிங் ஹேர் ஸ்டைல் வித்தியாசமாக எடுக்கப்பட்ட போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவு செய்திருக்கின்றார். வனிதாவின் அடையாளம் தெரியாத இந்த புது லுக்கிற்கு ரசிகர்கள் பலவிதமான கமெண்டுகளை குவித்து வருகிறார்கள்.

Categories

Tech |