Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் கடைகளுக்கு…. கூடுதல் பாமாயில் விநியோகம்…. ஐகோர்ட்டில் வழக்கு தள்ளுபடி…!!!

பாமாயில் அதிகமாக விநியோகிப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தமிழகத்தில் நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் ஒரு லிட்டர் அளவுள்ள 4 கோடி பாக்கெட் பாமாயில் எண்ணெய் சப்ளை செய்வதற்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் முடிவு செய்திருந்தது. இதற்காக கடந்த டிசம்பர் மாதம் டெண்டர் விண்ணப்பித்திருந்தது. ஒரு லிட்டர் பாமாயில் 120 ரூபாய் 25 காசுகள் என்ற விலையில் பாமாயில் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மே 3-ஆம் தேதிக்குள் கூடுதலாக எண்ணெய் சப்ளை செய்யும்படி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் உணவுப் பொருட்கள் வழங்கும் நிறுவனத்திற்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி ருச்சி சோயா, ஸ்டார் ஷைன் லாஜிஸ்டிக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் சென்னை ஐகோர்ட்டில் விண்ணப்பித்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இன்று தீர்ப்பு வழங்கியுள்ளார். அவர் அரசுக்கு வழக்கமாக எண்ணெய்  விநியோகம் செய்து வரும் நிறுவனங்களுக்கு சந்தை நிலவரம் தெரிந்திருக்கும் எனவும், பாமாயில் ஏற்றுமதிக்கு இந்தோனேசிய அரசு தடை விதித்துள்ளதால் அரசின் முடிவில் தலையிட எந்த காரணமும் இல்லாததால் வழக்கை தள்ளுபடி செய்வதாக நீதிபதி கூறியுள்ளார். மேலும் கூடுதலாக பாமாயில் சப்ளை செய்ய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கலகம் விண்ணப்பித்த டெண்டரையும் நீதிபதி நிராகரித்துள்ளார்.

Categories

Tech |