கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் இலங்கை நாட்டில் வாட் வரி, வருமான வரி ஆகியவை உயர்த்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக வருவாயை அதிகரிக்க முடியும் என அந்நாட்டு அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. இதனிடையில் புதிய பிரதமராக பதவியேற்ற ரணில் விக்ரமசிங்கே பொருளாதார நெருக்கடி பிரச்சினைகளுக்கு தீர்வுகாண பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் இலங்கை நாட்டில் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க வரிவிகிதம் உயர்த்தப்பட்டு உள்ளது. அந்த வகையில் அந்நாட்டில் பொருளாதார நெருக்கடி நீடித்துவரும் சூழ்நிலையில், வாட்வரி 8 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்ந்துள்ளது. முன்னதாக வாட், பந்தயம், கேமிங் ஆகிய வரிகளை உயர்த்த இலங்கை அமைச்சரவை ஒப்புதல் வழங்கிய சூழ்நிலையில் வாட்வரி அதிகரித்துள்ளது.