Categories
உலக செய்திகள்

வெடித்து சிதறிய எட்னா எரிமலை…. நதி போன்று ஓடும் நெருப்பு குழம்பு…!!!

இத்தாலியின் எட்னா எரிமலை ஆறு போன்று லாவா குழம்பை வெளியேற்றி கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாலி நாட்டில் அமைந்திருக்கும் எட்னா என்ற எரிமலையானது, ஐரோப்பிய கண்டத்தில் இருக்கும் மூன்று பெரிதான எரிமலைகளில் ஒன்றாக விளங்குகிறது. இத்தாலியில் இருக்கும் சிசிலி என்னும் பகுதியில் இருக்கும் இந்த எரிமலையானது வெடித்து சிதறியது.

இதனால், அந்த எரிமலையின் முகப்பிலிருந்து லாவா என்ற நெருப்பு குழம்பு மற்றும் சாம்பல் அதிகப்படியாக வெளியேற்றி கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நதியில் ஓடும் நீர் போன்று அதிகளவிலான நெருப்புக்குழம்பு தொடர்ந்து வெளியேறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |