Categories
தேசிய செய்திகள்

“வாகன சோதனையினால் ஏற்பட்ட தாமதம்”….. 3 வயது குழந்தை பலி….!!!!!

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த சரஸ்வதி-ரேவந்த் என்ற தம்பதிக்கு மூன்று வயதில் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தைக்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் தாய் சரஸ்வதி குழந்தையை ஜாங்சன் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அந்த குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் உயர் சிகிச்சைக்காக ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனைக்கு செல்லும்படி பரிந்துரைத்துள்ளனர். இதையடுத்து புவனேஸ்வர் மாவட்டத்திலிருந்து யாதகிரிகுட்ட மண்டலம் அருகே வாங்கப்பள்ளியின் புறநகரில் போக்குவரத்து போலீசார் குழந்தையை அழைத்துச் செல்லப்பட்ட காரை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர்.

மேலும் டிரைவரிடம் ஆயிரம் ரூபாய் வாகனம் செலுத்தி விட்டு பின்னர் செல்லும்படி கூறி உள்ளனர். குழந்தையின் தாய் சரஸ்வதி அவசர சிகிச்சைக்காக சென்று கொண்டிருப்பதாக கூறியும் போலீசார் அனுமதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. பிறகு கார் டிரைவர் ஆயிரம் ரூபாய் செலுத்தி விட்டு அங்கிருந்து செல்வதற்கு அரை மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த செய்தியை கேட்ட தாய் கதறி அழுத சம்பவம் அங்குள்ளவர்களை கலங்க செய்தது. இதுகுறித்து போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் கேட்டபோது அவசர காலங்களில் தாங்கள் வாகன சோதனைகள் மேற்கொள்வது இல்லை என்று கூறினார். இருப்பினும் இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் எனவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |