மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதற்கு விரைவில் சட்டம் கொண்டுவரப்படும் என மத்திய உணவு பதப்படுத்தல் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ராய்ப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், மத்திய அரசு உறுதியான பல சட்டங்களை இயற்றி வரும்போது மக்கள் தொகையை கட்டுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு சட்டம் கொண்டுவரப்படும் கவலைப்பட வேண்டாம்.
மேலும் ஜல் ஜீவன் திட்டங்களை காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கர் மாநிலம் வெறும் 23 % மட்டுமே நிறைவேற்றுகின்ற மாநிலங்கள் இதில் 50 சதவிகிதத்தை எட்டி இருக்கின்றனர். சத்திஸ்கரில் தண்ணீருக்கு தட்டுப்பாடு இல்லாத போதும் அதை மேலாண்மை செய்வதில் மாநில அரசு தோல்வி அடைந்திருக்கிறது. மேலும் கடந்த 8 வருடங்களில் ஏழைகளுக்காக பல்வேறு நலத் திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது என தெரிவித்தார்.