தமிழ் சினிமாவில் பிரம்மாண்டமான படங்களை இயக்கி பெயர் போனவர் சங்கர். இவரின் இளைய மகள் டாக்டரா அதிதி நடிகையாக நடித்து வருகிறார். இவர் முத்தையா இயக்கத்தில் கார்த்திக் நடித்திருக்கும் ‘விருமன்’ என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்தப் படம் சூர்யா தயாரிப்பில் ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி ரிலீசாக உள்ளது. அதிதி தெலுங்கு படத்திலும் பாட்டு பாடி உள்ளார். அதுமட்டுமில்லாமல் அவர் சூப்பராகவும் நடனமாடுகிறார்.
அதனைத் தொடர்ந்து இவர் சிம்புவின் கொரோனா குமார் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார். இந்நிலையில் அதிதியிடம் உங்களின் செலிபிரிட்டி கிரஸ் யார்? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், கே.ஜி. எஃப் படம் புகழ் ராக்கி பாய் என தெரிவித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். டாக்டருக்கு படித்து விட்டு நடிக்க வந்தது ஏன்? என்று அதிதி ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் சிலர் படித்த படிப்புக்கு வேலை பார்க்கவும் அறிவுரை வழங்கினர்.