மாணவியை கடத்திய குற்றத்திற்காக தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள சித்தார் கல்பாவி பகுதியில் தங்கராஜ் என்பவர் ரசித்து வருகிறார். இவருக்கு கட்டிட தொழிலாளியான அண்ணாதுரை(22) என்ற மகன் உள்ளார். இன்னிலையில் அண்ணாதுரைக்கும் அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அண்ணாதுரை அந்த சிறுமியை கடத்தி சென்றுள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அண்ணாதுரையை கைது செய்தனர். மேலும் மாணவியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.