தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்ததால் கடந்த பிப்ரவரி மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டன. அதன் பிறகு பள்ளிகளில் ஆண்டு இறுதித்தேர்வு முடிவடைந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அனைவரும் அடுத்த கல்வி ஆண்டில் தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் சென்னையில் உள்ள சில கல்லூரிகளில் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருவது மாணவர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் பெற்றோர்கள் மத்தியிலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சென்னை வண்டலூர் அருகே தனியார் பல்கலைக்கழக விடுதி மாணவர்கள் 74 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை வண்டலூர் அருகே உள்ள தனியார் பல்கலைக்கழக விடுதியில் 3,000 மாணவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
அதில் 74 மாணவர்களுக்குக் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் அனைவரும் விடுதியில் தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர். மேலும் பல்கலைக்கழகத்தில் நேரடி வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.