Categories
உலக செய்திகள்

இலங்கையில் நடந்த துப்பாக்கிசூடு தாக்குதல்…. இளைஞர் உயிரிழப்பு…!!!

இலங்கை கொழும்பு நகரில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டதில் ஒரு இளைஞர் பலியானதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இலங்கை கொழும்பு நகரில் இருக்கும் பெஸ்டியன் என்ற இடத்தில் இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் வந்திருக்கிறார்கள். அவர்கள் திடீரென்று துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியதில் ஒரு இளைஞர் பலியானார். மேலும் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது.

இச்சம்பவம் குறித்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. மேலும், பலியான அந்த இளைஞர் அநுராதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் ஒரு வழக்கிற்காக கோர்ட்டில் ஆஜராக வந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.

Categories

Tech |