தமிழ் திரையுலகில் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதற்கு இயக்குனர் எஸ் பி முத்துராமன் தலைவராகவும் நடிகர் நாசர் மற்றும் இயக்குநர் கரு பழனியப்பன் போன்றோரை உறுப்பினராகக் கொண்ட தேர்வுக் குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. தேர்வு செய்யப்படும் விருதுத் தொகையாக ரூபாய் 10 லட்சம் மற்றும் நினைவு பரிசு வழங்கப்படுகிறது. இந்த விருதினை கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3 ம் தேதி முதல்வர் ஸ்டாலின் வழங்கயிருக்கின்றார்.
மேலும் ஒவ்வொரு வருடமும் இந்த விருது வழங்கப்பட இருக்கின்றது. தமிழ் திரையுலகில் பல பரிமாணங்களில் சிறந்து விளங்கும் முன்னணி நடிகர் மற்றும் நடிகர் சங்க தலைவர் நாசரை தேர்வு செய்யும் தேர்வு குழுவில் உறுப்பினராக நியமித்தற்காக நன்றி தெரிவிக்கும் விதமாக முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி இருக்கின்றார். அந்தக் கடிதத்தில்,“பேரன்பிற்கும், மரியாதைக்கும் உரிய தமிழக முதல்வர் அவர்களுக்கு தாங்கள் ஆட்சி வரும் நற்பணிகளுக்கு தமிழக மக்களின் சார்பாக நன்றியும் வாழ்த்துக்களும்.
பாடிக் கொண்டிருந்த தமிழ் சினிமா பேச ஆரம்பிப்பதற்கு அதி முக்கிய காரணமாக, இலக்கியத்திற்கொப்ப வசனங்களை திரையில் ஒழிக்க சமுதாய சீர்திருத்த கருத்துக்களை மக்களிடம் எடுத்துச் செல்ல, அதன் மூலமாக மக்களிடையே ஒரு பேரெழிச்சியை கொண்டு வர காரணமாக இருந்த வித்து, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பெயரால் கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது மற்றும் 10 லட்சத்துக்கான பொன்முடிப்பும் வழங்கப்படும் என்பதை அறிவித்த தங்களுக்கு நன்றிகள் பல கோடி.
மேலும் கலைஞர்களுக்கு பொருளல்ல பிரதானம். சமூகத்தில் அங்கீகாரமும் பாராட்டும் தான். கலைமாமணி என்ற விருதை வைத்த கலைஞரின் பெயரால் இருக்கும் இந்த விருது பெரும் பெரும் கலைஞர்கள் மணமகிழ்வார்கள். அத்தகைய விருதினை பெறுவதற்கான சான்றோர்களை தேர்ந்தெடுக்க ஒரு குழு அமைத்தமைக்கும், அந்த குழுவில் ஒருவனாக இந்திய எளிய நடிகனையும் நியமித்ததற்கு நன்றி. மேலும் கொடுக்கப்பட்ட இந்த பணியினை முத்தமிழறிஞர் ஆசியோடு செவ்வனே செய்வேன் எனவும் உறுதி கூறுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.